ச்சீ…மெட்ரோ ரயிலில் அட்டூழியம் செய்த நபர்..வழக்கு பதிவு செய்த போலீசார்.!!

Delhi Metro

தலைநகர் டெல்லி மெட்ரோ ரயிலில் சமீபகாலமாக முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, பெண் ஒருவர் அரைகுறை ஆடையில் வந்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருந்த நிலையில், அவரை தொடர்ந்து, தற்போது இளைஞர் ஒருவர் மெட்ரோ ரயிலில் செய்த செயல் முகம் சுளிக்க வைத்துள்ளது.

டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த அந்த இளைஞர் சுயஇன்பம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மலிவால் டிவிட்டரில் “டெல்லி மெட்ரோவில் ஒரு நபர் வெட்கமின்றி சுயஇன்பத்தில் ஈடுபடும் வீடியோ வைரலானது. இது முற்றிலும் அருவருப்பானது மற்றும் வேதனையானது.

இந்த வெட்கக்கேடான செயலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல்துறை மற்றும் டெல்லி மெட்ரோவுக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன்” என கூறியிருந்தார். இதனையடுத்து, போலீசார் தானாக எடுத்துக்கொண்டு ஐபிசி 294 பிரிவின் கீழ் மெட்ரோ ரயிலில் சுய இன்பம் செய்த அந்த இளைஞரின் மீது வழக்கு பதிவு செய்து  இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், இந்த வீடியோவை ரயிலில் பயணித்த மற்றொரு பயணி பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், டெல்லி மெட்ரோவில் பயணித்த ஒருவர் தனது போனில் எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த அவர் அருகில் இருந்த மற்ற பயணிகள் மிகவும் அசௌகரியம் அடைந்து அவரிடமிருந்து விலகிச் சென்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்