புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டியில் மின்சார கசிவு.! 9 பேர் மருத்துவமனையில் அனுமதி.!

புதுக்கோட்டை ஆலங்குடி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியின் போது மின்கசிவு ஏற்பட்டு 9 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி எனும் ஊரில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்துள்ளது.
அந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்த நேரத்தில் மின்கசிவு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ஜல்லிக்கட்டு போட்டியாக காண வந்தவர்களில் 9க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, தற்போது அவர்கள் சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.