இன்று விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலஜி, உ.பியில் காவல்துறையினர் ராகுல் காந்தியை கீழே தள்ளியிருக்க வாய்ப்பில்லை. அது சித்தரிக்கப்பட்டது போல தெரிகிறது என கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் கடந்த மாதம் 14-ம் தேதி இளைஞர்கள் 4 பேர் ஒரு இளம் பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
படு காயங்களுடன் இரண்டு வாரங்களாக சிகிக்சை பெற்று வந்த நிலையில், அந்த இளம்பெண் கடந்த செவ்வாய்கிழமை உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் உத்தரபிரதேச பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சென்றனர்.
அப்பொழுது, போலீசாருடன் ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக ராகுல் காந்தி கீழே விழுந்தார். காவல்துறையினர் தான் ராகுல் காந்தியை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. தடை உத்தரவை மீறிச் சென்றதற்காக கூறி இருவரையும் கைது செய்யப்பட்டனர். பிறகு உத்தரபிரதேச காவல்துறையினர் அவர்களை விடுதலை செய்தனர்.
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…