துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில் பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.மேலும்,செருப்பு மாலை அணியப்பட்டது என்று ரஜினி பேசினார்.இவ்வாறு ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.ஆனால் ரஜினிக்கு ஆதரவாக ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரஜினியின் இந்த பேச்சிற்கு எதிராக தமிழகத்தில் பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகின்றது.பெரியார் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசிய ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.பெரியார் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் ரஜினிகாந்த் மீது திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இன்று பெரியார் பேரணி குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் ரஜினி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.திராவிடர் விடுதலை கழகத்தை சார்ந்த நேரு தாஸ் என்பவர் தொடந்த வழக்கில் ,கோவையில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.ஆனால் ரஜினி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த இரு வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…