#Breaking:நாளை முதல் ரேசன் கடைகள் மாலை 5 மணி வரை செயல்படும் -தமிழக அரசு அறிவிப்பு..!

Published by
Edison
  • நாளை முதல் ரேசன் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும்,
  • பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் ரேசன் கடைகளானது,காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும்,மேலும்,பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும்  இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும்,இதுகுறித்து தமிழக அரசு,அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில்,

  • காய்கறிகள்,மளிகைக் கடைகள் மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் காலை 6-00 மணி முதல் மாலை 5-00 மணி வரை செயல்பட தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
  • இச்சூழலில் நியாய விலைக் கடைகள் கீழக்காணும் பணி நேரத்தின்படி செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
  • எனவே 08.06.2021 முதல் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் காலை 09.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 02.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையிலும் நியாயவிலைக் கடைகள் செயல்படும், இந்த வேலை நேரம் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும்
  • அரசு செய்தி வெளியீட்டின்படி கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணைத் தொகை ரூ.2000/- மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பினை 15/06/2021 முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல ஏதுவாக டோக்கன்கள் விநியோகத்தினை 11/06/2021 முதல் 14/06/2021 முடிய கடைப்பணியாளர்கள் பிற்பகல் நேரங்களில் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும்.
  • 11/06/2021 முதல் 14.06.2021 முடிய முற்பகல் நேரத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பண்டங்களை வழக்கம் போல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

Published by
Edison

Recent Posts

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

2 minutes ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

24 minutes ago

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…

1 hour ago

ஹைதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு.!

ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…

2 hours ago

விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் – ரெய்னா.!

டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…

2 hours ago

“தவறை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” – தோல்வி குறித்த இஸ்ரோ தலைவர் கூறியது என்ன?

ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…

3 hours ago