அதிமுகவிற்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு தினகரன் மன்னிப்பு கடிதம் தர வேண்டும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கான சிகிச்சையை சசிகலா பெற்று வந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.மருத்துவமனையில் இருந்து புறப்படும் போது சசிகலாவுக்கு சொந்தமான காரின் முகப்பில் அதிமுக கோடி பொருத்தப்பட்டு சென்றார். இது அரசியலில் களத்தில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தான். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது.
அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுக தொடங்கப்பட்டது. இதுபோன்று ஜனநாயக முறையில் அதிமுகவை மீட்டெடுக்க சசிகலா சட்டப்போராட்டத்தை தொடர்வார்கள். மற்றோரு கட்சியை ஆரம்பித்ததே ஜனநாயக முறையில் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, அதிமுகவை மீட்டெடுப்பதற்காக தான் அமமுகவை ஆரம்பித்துள்ளோம். இது அவர்களுக்கு புரியும், ஆனால் புரியாத மாதிரி நடிப்பார்கள். எதுவாக இருந்தாலும் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கூறுகையில்,தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் இணைப்பது அது பற்றி தலைமை முடிவு செய்யும். அதிமுகவிற்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு தினகரன் மன்னிப்பு கடிதம் தர வேண்டும்.பல்வேறு கோணங்களில் அதிமுகவை கைப்பற்ற தினகரன் முயற்சி செய்து பார்த்தார்.அதிமுக உறுப்பினரே அல்லாத சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது.அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான்.மற்றவர்கள் சுயநலத்திற்காக கூறி வருகின்றனர்.தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக தன் பக்கம் உள்ளவர்களை தினகரன் ஏமாற்றி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…