இந்து கோவில்களை பற்றி இழிவாக பேசிய திருமாவளவனை கடுமையாக விமர்சித்தார் நடிகை காயத்ரி ரகுராம். இதற்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
சென்னை நுங்கப்பாக்கம் காம்தார் நகரில் உள்ள காயத்ரி ரகுராமின் வீட்டை முற்றிகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கு பதிலடியாக நேற்றிய தினம் காயத்ரி ரகுராம் மெரினா கடற்கரையில் என்னை நேருக்கு நேர் மிரட்ட தயாரா என டிவிட்டரில் திருமாவளவனுக்கு சவால் விடுத்திருந்தார்.
இதற்கிடையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கமிஷனரிடம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று புகார் அளித்தார். இந்நிலையில் சவால் தொடர்பாக மீண்டும் டிவிட்டரில் பதிவிட்டிருந்த காயத்ரி ரகுராம்.
அதில் இன்றைய தினம் மெரினாவில் சந்திப்பு தொடர்பாக திருமாவளவனின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறேன் இந்த நிமிடம் வரை அவரிடம் இருந்து எந்தவொரு தகவலும் வரவில்லை இதனால் விடுதலை கட்சி தொண்டர்களை ஏமாற்றும் விதமாக ஆகிவிட்டது. இதற்கு அடுத்து எந்தவொரு எம்பியும், அல்லது தலைவரோ சாதி, மதம் சார்த்த பாகுபாடுகளை பார்க்கமாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுருந்தார்.
உண்மையான தலைவர் அனைவரையும் ஒரே நேர்கோட்டில் தான் பார்ப்பார்கள் என எதிர்பாக்கிறேன். பின்னர் அனைவரும் உங்களின் வழக்கமான பணியைத் தொடருமாறு பதிவிட்டுருந்தார்.
மேலும் காயத்ரி ரகுராம் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது என தெரிகிறது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…