செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு – புதிய அமர்வு அமைப்பு

செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் நீதிபதி விலகியதால், புதிய அமர்வு அமைப்பு.
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். செந்தில் பாலாஜி மனைவி மேகலா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஆட்கொணர்வு மனுவை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சமயத்தில்,செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி ஒருவர் விலகினார்.
அதாவது, விசாரணை அமர்வில் இருந்த இரு நீதிபதிகளில், நீதிபதி சக்திவேல் விலகினார். இதன்பின் நடைமுறையை பின்பற்றி புதிய அமர்வு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி அறிவித்திருந்தார். செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் நீதிபதி விலகியதால் வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வில் பட்டியலிடப்படும் என்றனர்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரிப்பதற்காக, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை அமர்வில் இருந்து நீதிபதி சக்திவேல் விலகிய நிலையில் புதிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. ஆட்கொணர்வு மனுவை இன்றே விசாரிப்பதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் முயற்சிகள் எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.