அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளான பாமக, பாஜக கட்சிகளுடன் சுலபமான முறையில் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகி, வேட்பாளர் பட்டியலும் வெளியிட்ட நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பல முறை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியும், தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
தமிழ் மாநில காங்கிரஸ் தரப்பில் 12 இடங்கள் கேட்கப்பட்ட நிலையில், இறுதியாக நேற்று அக்கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதனிடையே, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் தமாகாவை தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர்.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திரு.வி.க நகர் பிஎல் கல்யாணி, ஈரோடு கிழக்கு எம் யுவராஜ், லால்குடி டிஆர் தர்மராஜ், பட்டுக்கோட்டை என்ஆர் ரங்கராஜன், தூத்துக்குடி எஸ்டிஆர் விஜயசீலன், கிள்ளியூர் கேவி ஜூட் தேவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…