கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்…முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

Published by
பால முருகன்

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆறுதல் தெரிவித்ததோடு 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில் ” கள்ளச்சாராயம் அருந்தி 3 பேர் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.   உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், மருத்தவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…

3 hours ago

தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு அதிகமாக மழை பெய்யும் – இந்திய வானிலை மையம்.!

சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…

3 hours ago

தி.மு.க-வுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் அளித்த பதில் என்ன?

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…

4 hours ago

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

5 hours ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

5 hours ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

6 hours ago