கோவை உயிரிழந்த 15 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.மக்கள் இதனால் அவதியுற்று வருகின்றனர்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடுநீர் பகுதியில் கனமழை காரணமாக வீடுகள் இடிந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் இடிபாட்டில் சிக்கி 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையினில் கோவை மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து உயிரிழந்த 15 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.குரு,ஹரிசுதா,ராம்நாதன்,அட்சயா,லோகுராம்,ஒவியம்மாள்,நதியா,சிவகாமி,நிவேதா,வைதேகி,ஆனந்தகுமார்,திலாகவதி,அருக்கணி,ரூக்குமணி,சின்னமாள் உள்ளிட்டோருக்கு நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…