சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ரெம்டேசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் இந்த வைரஸின் பரவல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டேசிவிர் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் மக்கள் மருந்தை வாங்குவதற்கு பெருமளவில் கூடி வந்தனர். இதனால் மருந்தை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனையடுத்து இன்று முதல் நேரு உள்விளையாட்டு அரங்கில் மருந்து விற்பனை மாற்றப்பட்டுள்ள நிலையில், காலை 9 மணி அளவில் மருந்து விற்பனை தொடங்கியுள்ளது. தினமும் 300 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரெம்டேசிவிர் மருந்து தட்டுப்பாடுகள் நிலவும் நிலையில், இதனை சாதகமாக பயன்படுத்தி பலர் கள்ள சந்தைகளிலும் விற்பனை செய்கின்றனர். இதனையடுத்து, இடைத்தரகர்கள் யாரையும் மக்கள் தொடர்பு கொண்டு ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…