Edappadi Palaniswami [Photo source :dtnext]
அமைச்சர் செஞ்சி மஸ்தான் சட்டவிரோதமாக பார் நடத்துபவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக இபிஎஸ் குற்றச்சாட்டு.
தமிழகத்தில் தடையில்லா கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போகும் திமுக அமைச்சரை பதவி விலக வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கள்ளச்சாராயம் விற்பனை செய்வோருக்கும், சட்ட விரோத பார் நடத்தும் தன் கட்சிக்காரர்களுக்கும் ஆதரவாக செயல்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதவி விலக வேண்டும்.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் சட்டவிரோதமாக பார் நடத்துபவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக இபிஎஸ் குற்றசாட்டியுள்ளார். மது விற்பனை தொடர்பாக அமைச்சரின் சொந்த ஊரான செஞ்சியில் மட்டும் திமுக நிர்வாகிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதவி விலகாவிட்டால் முதலமைச்சர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டாஸ்மாக்கில் கலால் முத்திரை உள்ள மது மட்டும் விற்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் இபிஎஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…