தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க முதல்வரிடம் கோரிக்கை..!

தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க முதல்வரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் சில திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க உத்தரவிடுமாறு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை தலைமைச்செய்யலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டானிடம் கொரோனா நிவாரண நிதியாக 50 லட்சத்தை தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் வழங்கினர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியது ” தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தியேட்டர்கள் திறப்பது தொடர்பாக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025