மகளிருக்கு மாதம் ரூ.1000 – தமிழக அரசு வெளியிட்ட முக்கிய வழிகாட்டு நெறிமுறை!

tn magalir urimai thogai

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான முகாம் மற்றும் கள ஆய்வு அலுவலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசும், அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மகளிர் உரிமைத்தொகை பெற ஒரு சில நரம்புகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்த எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. மறுபக்கம், மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுவதும் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது.

அந்தவகையில் நேற்று முன்தினம் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம்கள் அமைப்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. அதில், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை முகாம் பணிகளில் ஈடுபடுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நியாய விலைக்கடைக்கும் தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் மூலம் விண்ணப்பம் பெறப்படும். ரேஷன் கடைகளில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தன்னார்வலர்கள் எந்தெந்த நியாயவிலை கடை பகுதிகளில் வசிக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் வழங்கப்படும் என பல்வேறு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான முகாம் மற்றும் கள ஆய்வு அலுவலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த திட்டதிற்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்கள் பயனாளிகளின் இல்லங்களுக்கே வந்து தரப்படும். பயனாளிகளின் நியாயவிலைக் கடையில் எந்தெந்த நாட்களில், எந்தெந்தத் தெருக்களில் வசிக்கும் குடும்பங்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும் என தகவல் பலகையில் தெரிவிக்கப்படும். விண்ணப்பப் பதிவு முகாம் நேரம், காலை 9:30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடத்தப்படும். இதற்கு ஏற்ற வகையில் விண்ணப்பப் பதிவுச் சீட்டுகளில் முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய நேரங்கள் குறித்துத் தரப்படும்.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  பயனாளிகள் மட்டுமே விண்ணப்பங்களை விண்ணப்பப் பதிவு முகாமிற்கு எடுத்து வர வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் அளிக்கும் பொழுது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் (Bank Passbook). மின்சார வாரிய கட்டண ரசீது, ஆகியவற்றை அசலாகச் சரிபார்த்தலுக்கு காண்பிக்க வேண்டும்.

கூட்ட நெரிசலைத் தவிர்த்து விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கு 10 நாட்கள் முதல் 12 நாட்கள் வரை போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். கடைசி இரண்டு நாட்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நாளில் வர இயலாத பயனாளிகள், விடுபட்ட பயனாளிகள் அனைவருக்கும் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்க வேண்டும். மாவட்டம் மற்றும் வட்டத்தில் உள்ள பணியாளர்கள், இருப்பில் உள்ள பயோமெட்ரிக் சாதனங்கள், கண்காணிப்பு அலுவலர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து விண்ணப்பப் பதிவு முகாம்களின் கால அட்டவணையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

கள ஆய்வுக் குழுவில் உள்ள அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வீடுகளுக்குச் சென்று திட்டம் குறித்து விளக்கம் அளித்துக் தகுதிச் சரிபார்ப்புப் படிவத்தில் கேட்கப்படும் கேள்விகளைக் கேட்டு உரிய ஆவணங்களைச் சரி பார்த்துக் கைப்பேசிச் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முகாமில், பொதுமக்களுக்காக காத்திருக்கும் அறை, மருத்துவ வசதி, குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் என அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்