இந்தி பேசாத மாநிலங்களுக்கு நேரு அளித்த உறுதிமொழி காப்பாற்றப்பட வேண்டும்-கே.எஸ்.அழகிரி

மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது.இந்த புதிய கல்வி வரைவு கொள்கை 484 பக்கங்கள் கொண்டுள்ளது.
இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,இந்தி பேசாத மாநிலங்களுக்கு நேரு அளித்த உறுதிமொழி காப்பாற்றப்பட வேண்டும். இந்தி திணிப்பை நீண்ட காலமாக எதிர்த்து போராடி தடுத்த வரலாறு தமிழகத்திற்கு உண்டு. மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்படும் முடிவுகளை தமிழக அரசு துணிவுடன் எதிர்க்கவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025