மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றியதாக தகவல்.
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்து வரும் வெங்கடாசலத்தின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெங்கடாசலம் வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை சேர்த்ததாக கிடைத்த தகவலின்படி, 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு ஆளாகி உள்ள வெங்கடாசலம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர். அதிமுக ஆட்சியில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க பெரும் தொகையை வெங்கடாசலம் லஞ்சமாக பெற்றதாக தகவல் கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன் அவசர அவசரமாக 52 நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கியதாக குற்றசாட்டியுள்ளனர். இன்று அவரது வீட்டில் நடைபெற்று வரும் சோதனையில் ரூ.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வெங்கடாசலம் வீட்டில் தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 2 நாள் அவரச கூட்டத்திற்கு வெங்கடாசலம் ஒப்புதல் வழங்கிய பின்னணியில் பெரும் லஞ்சம் கைமாறியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் இந்த சோதனை நாளை வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…