குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1,500 வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1,500 வழங்கப்படும் எனவும் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார்.
அதிமுக அறிவிக்கப்போகும் திட்டங்களை முன் கூட்டியே தெரிந்து கொண்டு, திமுக அறிவித்து வருகிறது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். நேற்று திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சிறுகனுரில் சுமார் 750 ஏக்கரில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மாதம் தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
சென்னை : முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயலலிதாவின் 1998-ல் பாஜக ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த முடிவு "வரலாற்றுப்…
லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.…
கம்சாட்கா : ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில்…
சென்னை : பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சி தலைவர் ,விஜய் தலைமையில் வெற்றிபேரணியில்…