சாகித்ய அகாடமி விருது வென்ற கே.வி.ஜெயஸ்ரீ.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை தமிழில் பொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி அறிவிக்கப்பட்டது.

சாகித்ய அகாடமி விருது என்பது சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு இந்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்படும் உயரிய விருதாகும். இதில் இந்தியாவின் முக்கிய 24 மொழிகளில் வெளியாகும் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்றவற்றுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் 23 மொழிகளுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் கன்னட மொழிக்கு மட்டும் விருது அறிவிக்கப்படவில்லை. இந்த விருதில் மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை, நிலம் பூத்து மலர்ந்த நாள் என தமிழில் பொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. இத்துடன் ரூ.50 ஆயிரம் ரொக்கம், செம்பு பட்டயமும் விருதாக அவருக்கு அளிக்கப்படும்.

இதுகுறித்து பேசிய கே.வி.ஜெயஸ்ரீ, மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை தமிழில் மொழிபெயர்க்குமாறு எழுத்தாளர் ஜெயமோகன் பரிந்துரைத்தார். பின்னர் சங்க கால தமிழ் இலக்கியத்தை குறித்து மலையாள எழுத்தாளர் எழுதியிருந்தது தனக்கு வியப்பை அளித்தது. மேலும் மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வானது மகிழ்ச்சியளிக்கிறது, என்றும் 20 ஆண்டுகளாக மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டு வருகிறேன் என தெரிவித்தார். இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சாகித்ய அகாடமி விருது வென்ற கே.வி.ஜெயஸ்ரீக்கு வாழ்த்து கூறினார், அவர் மென்மேலும் இதுபோன்ற பல விருதுகளைப் பெற அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

3 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

4 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

4 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

5 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

6 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago