Accident : சேலம் நெடுஞ்சாலையில் லாரி மீது ஆம்னி வேன் மோதி கோர விபத்து.! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி.!

Salem Sangakiri Omni Van Accident

சேலம் மாவட்டம் சங்ககிரியில் சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாயில் சின்ன கவுண்டனூர் பகுதி அருகே, நன்கு முனை சந்திப்பில் ஒரு சரக்கு லாரி நின்று கொண்டு இருந்துள்ளது. அப்போது அந்த வழியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை நோக்கி வேகமாக வந்த ஆம்னி வேன் ஓன்று நின்று கொண்டிருந்த லாரி மீது வந்த வேகத்தில் பயங்கர சத்தத்துடன் மோதியது.

இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தை சஞ்சனா உட்பட செல்வராஜ், மஞ்சுளா, ஆறுமுகம், பழனிசாமி, பாப்பாத்தி, பிரியாஆகிய ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

அப்போது காரில் பயணித்த இரண்டு பேர் பலத்த காயங்களுடன் இருப்பதை கண்டு, அவர்களை மீட்டு  சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீதம் உள்ள 6 பேரின் சடலங்கள் மட்டுமே மீட்க முடிந்தது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் போன்றவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்