திருச்சியில் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய சாமியாடியை, அடித்து உதைத்த பொதுமக்கள்.
திருச்சி, அல்லித்துறை அருகே சவேரியார்புரத்தை சேர்ந்த ஜூலியஸ் சாந்தகுமார், இரவில் சுடுகாட்டில் தங்கி நிர்வாணமாக மாந்திரீக பூஜைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.அடிக்கடி ஜூலியஸ் சாந்தகுமாருடன், ஊர் மக்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, சுண்ணாம்புக்காரன்பட்டியில் தனது இரு வாகனத்தை தீ வைத்து எரித்த ஜூலியஸ், வழியில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின் தன்னை தானே கத்தியால் கீறிக்கொண்டதை பார்த்த பொதுமக்கள், சோமரசன் பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, ஜூலியஸை பிடித்த எஸ்.ஐ-யை கத்தியால், கை மற்றும் பிற உறுப்புகளில் குத்தியுள்ளார். இதை பார்த்த பொதுமக்கள், சாமியாடியை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், உதவி காவல் ஆய்வாளர் மற்றும் சாமியார் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…