SanatanaDharma : என் தலையை சீவ 10 கோடியா.? 10 ரூபா சீப்பு போதும்.! சாமியாருக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி.!

Published by
மணிகண்டன்

அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது அல்ல. அவை டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இவரது பேச்சுக்கு கடும் கண்டங்களை பாஜக உள்ளிட்ட பாஜக ஆதரவு அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.

அவர் மீது வடமாநிலங்களில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் கோரிக்கையும் பாஜக தரப்பில் இருந்துவலுத்து வருகின்றன. இந்நிலையில் , உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா என்பவர் நேற்று, சனாதன கொள்கைக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவருக்கு 10 கோடி ரூபாய் தரப்படும் என அறிவித்து அதிர வைத்தார்.

இந்த சாமியார் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற அரசியல் நிகழ்வில் இது பற்றி கலகலப்பாக பதிலடி கொடுத்தார். அவர் கூறுகையில், என்னுடைய தலையை சீவ ஒரு சாமியார் 10 கோடி தருகிறேன் என கூறுகிறார். 10 ரூபாய் சீப்பு போதும் என் தலையை நானே சீவிக்கொள்வேன் என பரபரப்பாக பேசப்பட்ட அந்த சாமியார் கருத்துக்கு நகைச்சுவையாக தனது பதிலடியை கொடுத்துள்ளார்.

மேலும், நான் அப்போதே மேடையில் சொன்னது நடந்துருச்சி. சனாதனம் பற்றி பேசியதும் என்மீது விமர்சனங்கள் விழும் என தெரியும். தற்போது இந்தியா முழுக்க என்னைப்பற்றி தான் பேசுகிறார்கள். இந்தியா முழுக்க என் மீது புகார்கள் குவிகின்றன. என்னுடைய தலைக்கு 10 கோடி ஒரு சாமியார் கூறுகிறார். சாமியாருக்கு எப்படி அவ்வளவு பணம் கிடைத்தது.?  என கேள்வி ஏழுப்பினார்.

பெரியார், அண்ணா, கலைஞர் , தற்போது நம்முடைய தலைவர் என அனைவரும் சனாதன கொள்கையை எதிர்த்தவர்கள் தான். அதனை இன்னும் எதிர்ப்போம். நான் பேசுவதை திருத்தி பேசுகிறார்கள் சனாதனம் என்றால், யாரும் கேள்வி கேட்க கூடாது, அந்த விதிகளில் எந்தவித மாற்றமும் செய்ய கூடாது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. பெண்கள் பயில கூடாது என்கிறது சனாதன தர்மம். பாஜக தான் இந்து விரோத கட்சி என கூறுகிறார்கள். மணிப்பூரில் இனப்படுகொலை செய்து கொண்டு இருப்பது பாஜக தான். மணிப்பூரில் தொலைக்காட்சிக்கு அனுமதி இல்லை. உண்மையான இனப்படுகொலை செய்து கொண்டு இருப்பது பாஜக தான் என பல்வேறு விமர்சனங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  முன்வைத்து பேசினார்..

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

56 minutes ago

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

2 hours ago

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

5 hours ago