[file image]
சனாதன எதிர்ப்பு பேச்சு தொடர்பான வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்மாத தொடக்கத்தில் சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தமிழகம் மட்டுமல்லாமல் தேசிய அளவில் பேசப்பட்டது. அதாவது, சனாதனத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்று ஒழிக்க வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதியின் பேச்சு சர்ச்சையானதை அடுத்து, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
அதுமட்டுமில்லாமல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு உத்தரபிரதேச சாமியார் ஒருவர் விலை வைத்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசியதை எதிர்த்து நாட்டில் பல்வேறு இடங்களில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், சனாதன சர்ச்சையில் நடவடிக்கை எடுக்கக்கோரியும், சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரணை தேவை என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் சனாதனம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சனாதன சர்ச்சையில் நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. சனாதன விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சனாதனம் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை அணுகாமல் உச்சநீதிமன்றத்தை அணுகியது ஏன் என மனுதாரருக்கு நீதிபதிகள் அனிருத்தா போஸ், பேலா திரிவேதி கேள்வி எழுப்பியுள்ளனர். சனாதன விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சனாதன சர்ச்சை விவகாரத்தில் தலையிட விருப்பமில்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, சனாதன எதிர்ப்பு பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…