சிகிச்சை பெற்று வரும் சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 20- ஆம் தேதி சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையின் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் அவருக்கு உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. சுயநினைவுடன் இருக்கிறார். தாமாகவே உணவு உட்கொள்கிறார். உதவியுடன் சசிகலா நடக்கிறார் என்றும் கொரோனா அறிகுறிகள் இல்லாத நிலையில், சசிகலாவுக்கு தொடர்ந்து கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் சசிகலாவிற்கு ஆக்சிசன் கொடுக்கப்படவில்லை என்றும் நேற்று வரை 2 லிட்டர் ஆக்சிசன் கொடுக்கப்பட்டு வந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு பெங்களூர் சிறையிலிருந்து சசிகலா விடுதலை ஆன நிலையில், சிறை தண்டனை இன்று முடிந்தாலும் மருத்துவமனையில் சிகிச்சை தொடரும் என்றும் முழுமையாக குணமடைந்த பிறகு சசிகலா தமிழகம் வருவார் என்றும் பிப் 3-ஆம் தேதி சென்னை வருவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…