சாத்தான்குளம் தந்தை-மகன் விவகாரத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.வழக்கினை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது சிபிஐ . முதலில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
முதலில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ,உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோரை சிபிஐ விசாரித்தது. விசாரணைக்கு பின்னர் காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.இரண்டாவதாக கைது செய்யப்பட்ட வெயிலுமுத்து , சாமதுரை, செல்லதுரை ஆகியோரை சிபிஐ காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது . இதனையடுத்து 3 காவலர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதற்குஇடையில் கொரோனா காரணமாக காவலர் பால்துரை உயிரிழந்தார்.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசாருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று முதல் வழக்கு விசாரணை துவங்குகிறது. போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.9 போலீசாரிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட உள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…