பென்னிக்ஸ்-ஜெயராஜ் இல்லத்தில் இரண்டு மணி நேரம் விசாரணை.
சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் இருவரும் காவலர்களால் சிறையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பான போலீசாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, சாமதுரை, செல்லத்துரை, வெயிலுமுத்து ஆகிய மூன்று பேரை காவலில் எடுத்துள்ள சிபிஐ அதிகாரிகள் அவர்களை சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து 4 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இல்லத்தில் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தினர். அப்போது ஜெயராஜின் உறவினர்களான தாவீது மற்றும் தேசிங்கு ராஜா ஆகியோரிடமும் விசாரணை நடத்தி, எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெற்றனர். மேலும், சாத்தான்குளம் காவல் நிலைய எழுத்தர் பியூலாவிடமும் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…