எஸ்.பி.பி பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இல்லை என்று ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த் எஸ்.பி.பி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், எஸ்.பி.பி பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இல்லை என்றும் அவரது கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக்கொண்டே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பி அவர்களின் மனிதநேயத்தை அனைவரும் நேசித்தார்கள். அவருக்கென்று ஒரு தனி சிறப்பு உள்ளது. அவரது இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. எஸ்.பி.பி-ஐ இழந்து வாழும் அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். மேலும், அவரது பதிவில் எஸ்.பி.பி அவர்கள் பல ஆண்டுகளாக எனது குரலாக ஒலித்தீர்கள். உங்களது குரலும், நினைவுகளும் என்னுடன் என்றென்றும் வாழும். நான் உங்களை உண்மையிலேயே இழப்பேன் என்று பதிவில் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…