, ,

அரியலூர் அருகே பள்ளி வேன் மோதி சிறுவன் உயிரிழப்பு..!

By

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள திருகளப்பூர் கிராமத்தை சார்ந்தவர் மணிகண்டன் இவரது தங்கை மகள் கலைவாணி (2) பெரியகருக்கையில் உள்ள ஒரு தனியார்  மழலையர் பள்ளியில் படித்து வருகிறார்.
கலைவாணி வேனில் பள்ளிக்கு சென்று மீண்டும் அதே வேனில் திரும்புவது வழக்கம். இந்நிலையில் இன்றும் வழக்கம் போல கலைவாணியை பள்ளிக்கு அழைத்து செல்ல அவரின் வீட்டு அருகில் பள்ளி வேன் வந்தது.
அப்போது மணிகண்டனின் மகன் ராகுல் (2) வேன் அருகில் ஓடியுள்ளார்.எதிர்பாராதவிதமாக ராகுல் வேனின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்து உள்ளார்.இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் ஓட்டுநரை கைது செய்ய கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

Dinasuvadu Media @2023