தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

DPI

தமிழ்நாடு முழுவதும் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நாளை சனிக்கிழமை (ஜூலை 15) முழுவேலைநாளாக வழக்கம்போல் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுவதால் நாளை பள்ளிகள் செயல்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளிகளில் காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்திடவும் பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்