4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு..!

Published by
murugan

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் கடந்த 4-ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்தன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கி நின்ற மழை வெள்ளம் தற்போது வடிந்து வருவதால் ஒரு வார விடுமுறைக்கு பிறகு பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன. டிசம்பர் 4-ஆம் தேதி முதல் நேற்று வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில்  உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு ஏழு நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏழு நாட்கள் விடுமுறைக்கு பிறகு  இந்த நான்கு மாவட்டங்களிலும் உள்ள பள்ளி கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன.

பள்ளி கல்லூரிகள் இன்று திறக்கப்படும் நிலையில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க ஏற்கனவே அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முறையில் அனைத்து நடவடிக்களையும்  மேற்கொள்ளும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையால் 4 மாவட்டங்களிலும் டிசம்பர் 4 முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

சென்னை, காஞ்சிபுரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட  நான்கு மாவட்டங்களில் பள்ளிகளை தூய்மைப்படுத்த 1.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு தலா 50 லட்சமும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

Recent Posts

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

11 minutes ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

3 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

4 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

4 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

7 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

7 hours ago