அரையாண்டுத் தேர்வுகள் அனைத்துப் பள்ளிகளிலும் முடிந்த நிலையில் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை முடிந்த பின்பு ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.எனவே தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதிலாக 3ஆம் தேதி திறக்கப்படும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.பின்னர் ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து 3ஆம் தேதி திறக்கப்படும் என்று இருந்த நிலையில் 4ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் 2 நாட்களாக நடைபெற்றது .எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.இதனையடுத்து இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.ஆனால் பள்ளிகளுக்கு செல்லும் முதல் நாளே, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் திருப்புதல் தேர்வு நடைபெறவுள்ளது. இது ஏற்கனவே முடிவெடுத்திருந்ததால், இதில் எந்த மாற்றமும் இல்லாமல் தேர்வை நடத்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.இதனால் பள்ளி மாணவர்கள் நெருக்கடியில் உள்ளனர்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…