திரை இசை இமயம் இன்று சரிந்து விழுந்துவிட்டது – திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.!

Published by
பாலா கலியமூர்த்தி

திரை இசை பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு – திமுக கழக  பொதுச்செயலாளர் துரைமுருகன் இரங்கல்.

திரை உலகில் இசையின் இமயமாக உயர்ந்து நின்றவர் எஸ்.பி பாலசுப்ரமணியம். அந்த இமயம் இன்று சரிந்துவிட்டது. நிரப்ப முடியாத இடம் பாலுவின் இடம். இசைக்கடல், தன் ராக ஆலாபனை அலைகளை ஆடாமல் நிறுத்திக் கொண்டது. இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு எஸ்.பி.பி-யின் புகழ் நிலைத்து நிற்கும் என்று திமுக பொதுச்செயலர் துரைமுருகன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் மருத்துவமனையில் இருந்து நுங்கப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பின்னர் நாளை அவரது பண்ணைவீட்டில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

2 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

3 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

4 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago