துல்கர் சல்மான் நடித்த வரனே அவசியமுண்ட திரைப்படத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரை தவறாக சித்தரித்ததாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படமான வரனே அவசியமுண்ட திரைப்படத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரில் இழிவான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசுகையில், ‘ துல்கர் சல்மான் நடித்து அண்மையில வெளிவந்துள்ள வரனே அவசியமுண்ட திரைப்படத்தில் ஒரு காட்சியில், தமிழ் தேசிய இனத்தின் அடையாளமாக இருக்கும் உன்னத தலைவரான மேதகு.வே.பிராபகரன் அவர்களின் பெயரை தவறாக பயன்படுத்தி அவமதிக்கும் வகையில் காட்சியமைக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.’ என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும், ‘ துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான முந்தைய படமான காம்ரேட் இன் அமெரிக்கா திரைப்படத்திலும் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் புகைப்படம் ஒரு காட்சியில் பயன்படுத்த பட்டிருக்கும் அதனால், கட்டாயம் பிரபாகரன் பற்றி துல்கருக்கு தெரிந்திருக்கக்கூடும். எனவே, தெரியாமல் வைத்துவிட்டோம் என துலகர் கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல. படக்குழுவினர் நினைத்திருந்தால் இப்படி ஒருகாட்சியில் அத்தகைய பெயரை பயன்படுத்தாமல் தவிர்த்திருக்கலாம்.’ என தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இந்த சர்ச்சை குறித்து படத்தின் நாயகன் துல்கர் கூறுகையில், ‘தமிழர்களை காயப்படுத்தும் எவ்வித நோக்கத்திலும் திரைப்படத்தில் காட்சி வைக்கப்படவில்லை. இதனால், யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்’ என தனது விளக்கத்தை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…