எரிகாற்று உருளையின் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவது நாட்டு மக்கள் தலையில் விழுந்த பேரிடி என சீமான் கண்டனம்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த்தொற்றால் மக்கள் நிற்கதியற்று, நிற்கையில் அவர்களது வாழ்வாதாரத்துக்கு எதுவுமே செய்யாத ஒன்றிய பாஜக அரசு, எரிக்காற்று உருளையின் விலை ரூ.875 ஆக உயர்த்திருப்பது மக்களிடம் பெரும் கொதிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் நாட்டு மக்கள் பெருந்துயருக்கு ஆளாகி, அன்றாட செலவினங்களையே எதிர்கொள்ள முடியாது திணறி திண்டாடி கொண்டியிருக்கையில், எரிக்காற்று உருளையின் விலையும் தொடர்ந்து உயர்த்தப்படுவது தலையில் விழுந்த பேரிடியாக அமைந்திருக்கிறது.
தவறான பொருளாதார கொள்கையினால் நாட்டின் பொருளாதாரத்தை புதை குழிக்குள் தள்ளிவிட்டு, அதனை சமப்படுத்த மக்களின் மீது சுமையை ஏற்றும் பாஜக அரசின் கொடுஞ்செய கொடுஞ்செயல் கடும் கண்டனத்திற்குரியது. ஏழை, நடுத்தர வர்க்கத்து மக்களை பற்றி துளியளவும் சிந்திக்காது தனிப்பெரு முதலாளிகளின் லாபவேட்டைக்கு வாசல் திறந்துவிட்டு, குடிகளை நாளும் வாட்டி வதைக்கும் பாஜகவின் ஆட்சி மனிதகுலத்திற்கே எதிரானது என தெரிவித்துள்ளார்.
இதனிடையே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 அதிகரித்து, ரூ.875 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மத்திய அரசை கண்டித்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…