[file image]
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கேரள மாநிலம் கொச்சியில் ஒரு சில தினங்களுக்கு முன் அமலாத்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கில் அவரது சகோதரர் அசோக்குமார் வீடு உள்ளிட்ட சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை, அவருக்கு 4 முறை சம்மன் அனுப்பியும், விசாரணைக்கு ஆஜராகாததால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை எனவும் அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. கைதை மறுத்துள்ள அமலாக்கத்துறை 4 முறை சம்மன் அனுப்பட்டதாகவும், ஆனால் அவர் ஆஜராகவில்லை எனவும் விளக்கமளித்துள்ளது. ஜூன் 16 முதல் ஜூலை 16 வரை அசோக்குமாருக்கு 4 முறை சம்மன்கள் அனுப்பப்பட்டதாக கூறியிருந்தது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் விரைவில் சரண்டராவார் என அவர் தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எந்த வழக்கிற்காக சோதனை நடந்தது என்பதை தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை பார்த்தபின் சரண்டராவார் எனவும் கூறியுள்ளார். அமலாக்கத்துறை 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், அசோக்குமாருக்கு வழங்கப்பட கேடு நிறைவு பெற்றதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் அசோக் குமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய பிறகே செந்தில் பாலாஜிக்கு பிணை கிடைக்கும் சூழல் இருக்கிறது. இந்த நிலையில், குற்றப்பத்திரிகை கிடைத்த உடனே செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் விரைவில் சரணடைவார் என அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…