[file image]
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி செப்-15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சமயத்தில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவித்திருந்தது. இதையடுத்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ முறையிட்டார். எனவே, ஜாமீன் மனு மீதான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை, எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க கோரி அவரது தரப்பில் மீண்டும், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்தனர். வழக்கறிஞர்கள் அருண் மற்றும் பரணி ஆகியோர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு ஆஜராகி ஜாமீன் மனுவை விசாரிக்க கோரிக்கை வைத்தனர்.
அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து முடிவெடுக்க நீதிபதி ரவி அறிவுறுத்தியுள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தன்னால் விசாரிக்க முடியாது எனவும் நீதிபதி ரவி கருத்து தெரிவித்தார். எனவே, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…