செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு 3வது முறையாக சம்மன் – வருமான வரித்துறை.!

அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு வருமான வரித்துறை 3வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக, ஏற்கனவே 2 முறை அனுப்பப்பட்ட சம்மனுக்கு அசோக் தரப்பில் இருந்து இதுவரை பதில் அளிக்காததால், 3வது முறையாக சம்மன் அனுப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 27ம் தேதி விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பியது வருமானவரித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த முறை ஆஜராக வில்லை என்றால், அவர் கைது செய்யபடலாம் என கூறப்படுகிறது.