மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?
பிளஸ் 2 முடிவுகள் முன்கூட்டியே வெளியான நிலையில், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளும் முன்கூட்டியே வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த தேர்வுக்கான முடிவுகள் எப்போது மாணவர்கள் காத்திருந்த நிலையில், அதனைப்பற்றி சிறிய தகவலும் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே, +2 (HSE +2) பொதுத் தேர்வு முடிவுகள் விரைவாகவே அதாவது மே 8, 2025 அன்று வெளியானது.
அதைப்போலவே, 10ஆம் வகுப்பு பொது தேர்வுகளின் முடிவுகளும் விரைவாகவே வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் அதாவது மே 16ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது வெளியாகவில்லை. தகவல்களாகவே மட்டுமே வெளியாகி இருக்கிறது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அதே சமயம் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜூலை 2025 இல் நடைபெறவிருக்கும் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம், அதைப்போல மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு தேவைப்பட்டால், முடிவுகள் வெளியான பிறகு விண்ணப்பிக்க வாய்ப்பு உண்டு. மாணவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக dge.tn.gov.in இணையதளத்தை தவறாமல் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி வெளியானது என்றால் அதேபோல 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளும் அதே நாள் பிற்பகலில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.