குழந்தைகளின் ஆபாசப்படங்களை பகிர்தல் தீவிரமாக அணுக வேண்டிய பிரச்சினை – உயர்நீதிமன்ற மதுரை கிளை!

குழந்தைகளின் ஆபாசப்படங்களை பகிர்வது தீவிரமாக அணுக வேண்டிய பிரச்சினை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்த சாம் இன்பெண்ட் ஜோன்ஸ் எனும் இளைஞர் மீது குழந்தைகளிடம் இணையம் வழியாக ஆபாச படங்களை பகிர்வது தொடர்பாகவும் இணையத்தில் உள்ள ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனது நண்பர்களுக்கு பகிர்ந்து தொடர்பாகவும் அவர் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் சாம் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், தனக்கு இந்த வழக்கிலிருந்து சாம் முன்ஜாமீன் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவரது செல்போன் உள்ளிட்ட சில ஆவணங்களை காவல்துறையினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். மேலும் தற்பொழுது அவரை காவலில் எடுத்து விசாரிக்க கூடிய அதிகாரம் இருந்தாலும் கொரோனா தொற்று காரணமாக அவருக்கு தற்பொழுது முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்து மதுரை கிளை உயர் நீதிமன்ற நீதிமன்றம், குழந்தைகளின் ஆபாச பட பகிர்வு உடனடியாக தீர்வு காண வேண்டிய பிரச்சனை எனவும், போக்சோ சட்ட விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், நல்லொழுக்க கல்வி அளிப்பதும், மத்திய மாநில அரசுகளின் கடமை எனவும் இதன் மூலம் தான் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும் எனவும் உயர்நீதிமன்றக் மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025