ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கியதால் அதிர்ச்சி..! அதிகாரிகள் தீவிர விசாரணை...!

Officials were shocked as two vehicles were running with the same number plate in Vellore and Aavin

aavin

வேலூரில், ஆவினில் ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கியதால்  அதிகாரிகள் அதிர்ச்சி

வேலூரில், ஆவினில் ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கியதால்  அதிகாரிகள் அதிர்ச்சி  அடைந்துள்ளனர். பால் திருட்டு கண்காணிப்பை அதிகாரிகள் தீவிரப்படுத்திய நிலையில் இந்த விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நூதன முறையில் பல ஆயிரம் லிட்டர் பால் திருடப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், ஒரே பதிவெண்ணில் இயங்கிய 2 வேன்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணைக்கு பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.