மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் இருந்து விலக்கு.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுகிறது. இதனால் அரசின் உத்தரவை முறையாக பின்பற்றதாக அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, இதனை மீறி மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால் சம்மந்தப்பட்ட கல்லூரி மற்றும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025