சென்னையில் துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்ஐ கைது.
இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் இன்று பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் சென்னையில் மாதாவரம் காவல் நிலையத்தின், காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
சிறுமியின் தந்தை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து எஸ்ஐ சதீஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், இவரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், எஸ்.ஐ சதீஷ்க்கு சிறுமியின் தாயான ரேவதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் காரணமாக தான் அவர் ரேவதியின் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சிறுமியின் தாய் ரேவதி மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் பெரியம்மா இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…