சாலையில் வீணாகும் தண்ணீரில் சோப்பு போட்டு குளித்து நூதன போராட்டத்தில் ஈடுப்பட சமூக ஆர்வலர்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான தண்ணீர்  வீணாவதை கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சியிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
  • இந்நிலையில் மாநகராட்சியை கண்டிக்கும் வகையில், அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் என்பவர், குழாய் உடைந்து சாலையில் வீணாகும் தண்ணீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாட்டில் தண்ணீர் பிரச்னை அதிகரித்து கொண்டே வரும் நிலையில், மக்கள் ஆகிய நாம் இருக்கும் தண்ணீரை சரியாக பராமரிக்காமல் சற்று அலட்சியமாக இருக்கின்றோம். பல கிராமங்களில் சாலைகளிலோ, தெருக்களிலோ குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடித்துவிட்டு அதை அடைக்காமல் செல்லவது மற்றும் நிலத்தடியில் வரும் தண்ணீர் பைப்புகள் மற்றும் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் தேங்கி நிற்பது, அதை சரி செய்ய பஞ்சாயித்து உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி தாமதப்படுத்துவதால் தண்ணீர் வீணாக போகிறது. மேலும் இதனால் பல விதமான நோய்கள் மக்களிடம் பரவுகிறது.  இதுகுறித்து மக்கள் மற்றும் சமூக அக்கறை கொண்டனவர்கள் தண்ணீர் வீணாவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவார்கள்.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான தண்ணீர் சாலையில் வீணாவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சியிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் மாநகராட்சியை கண்டிக்கும் வகையில், அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் என்பவர், குழாய் உடைந்து சாலையில் வீணாகும் தண்ணீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சாலையில் வீணாகும் தண்ணீரில், ஒருவர் சோப்புப் போட்டு குளித்ததை அந்த வழியே சென்றவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…

14 minutes ago

மத மோதல்களை தூண்டும் பேச்சு? மதுரை ஆதீனம் மீது போலீசில் பரபரப்பு புகார்!

மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…

47 minutes ago

Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…

3 hours ago

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…

4 hours ago

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

5 hours ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

6 hours ago