‘தமிழகத்தில் அழகான மேயர் வேட்பாளராக கோவையில் களமிறக்கபட இருக்கிறார் சோனாலி பிரதீப்’.
சொந்த ஊரான கோவை, கவுண்டம்பாளையத்தில் ஆரம்ப காலத்தில் மார்கெட்டிங் மேனேஜர்,சேல்ஸ் எக்ஸிகியூடிவ் என கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
பூர்விகம் குஜராத் ,ஆனால் அவரது தாத்தா காலத்துலயே தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்.பிரதீப் ஜோஸ் என்பவர் சோனாலியின் கணவர் இவர் மலையாள படத் தயாரிப்பாளர் ‘கடிகார மனிதர்கள்’ என்கிற ஒரு தமிழ் படத்தை வெளியிட்டுருக்கிறார்.
இந்தியாவில் உள்ள அணைத்து இடங்களிலும் நடக்கும் அழகி போட்டிகள் மட்டும் இல்லாமல் மொரீசியஸ் என்ற நாட்டிற்கும் சென்று மிஸ் இந்தியா யூனிவெர்ஸ் 2019 எர்த் உட்பட பல அழகிப் பட்டங்களை வென்று வந்துள்ளார்.
சமீபத்தில் தான் அதிமுக-வில் இணைந்தார் சோனாலி.மொரிசியஸ் நாட்டில் நடந்த அழகி போட்டியில் வென்ற பட்டத்தை உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியிடமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் காண்பித்து வாழ்த்துக்களை பெற்றார்.
கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் போல் அவரது சமூக வலைத்தளங்களில் அதிமுக, வேலுமணி அறிவிப்புகளை பதிவிட்டு வருகிறார் .
இதை தொடர்ந்து கோவை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு சோனாலியும் விருப்ப மனு அளித்திருந்தார்.மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளதால் சோனாலியை கவுன்சிலர் ஆக்க அதன் பின் மேயர் ஆக்கவும் சிலர் தீவிரமான முயற்சியில் திட்டமிட்டுயிருக்கிறார்கள்.
கோவை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் சந்திரசேகரின் மனைவி டாக்டர் சர்மிளாவுக்கும் ,சோனாலிக்கும் கடுமையான போட்டி நிலவலாம் எனக் கூறப்படுகிறது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…