சூரனை வதம் செய்த ஜெயந்திநாதர்… கடற்கரை எங்கும் ‘அரோகரா’ கோஷம்.!

கடந்த நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற கந்த சஷ்டி நிகழ்வின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று முருகனின் அறுபடை வீடுகளில் (திருத்தணி தவிர) நடைபெற்றது. குறிப்பாக சூரனை வதம் செய்த அறுபடை வீடுகளில் 2வது வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்றது.
சூரசமஹாரா நிகழ்வை முன்னிட்டு இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் ஜெயந்தி நாதராக யாகசாலை மண்டபம், கந்தசஷ்டி மண்டபம், சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவனிடம் வரம் பெற்ற சூரனை வதம் செய்த ஜெயந்தி நாதர்.. சூரசம்ஹார வரலாறு.!
அதன் பிறகு, கடற்கரையில் சூரனை வதம் செய்ய ஜெயந்திநாதர் மாலையில் எழுந்தருளினார். சூரசம்ஹார நிகழ்வை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பகதர்கள் திருச்செந்தூர் வந்திருந்தனர். திருச்செந்தூர் கடலை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது என்றே கூறும் அளவுக்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருந்தது.
கடற்கரையில் எழுந்தருளிய ஜெயந்தி நாதர், கஜமுகனாக, சிங்க முகனாக, யானை முகனாக வந்த சூரனை வதம் செய்து அதன் பின்னர் சூரனையும் வதம் செய்து , இறுதியாக மாமரமாக இருந்த சூரனை இரண்டாக பிளந்து ஒரு பகுதியை மயிலாக தனது வகனமாகவும், இன்னொரு பகுதியை சேவல் கொடியாகவும் ஜெயந்தி நாதர் ஆட்கொண்டார்.
சூரனை வதம் செய்த ஜெயந்தி நாதருக்கு சிறப்பு பூஜைகள் , குறிப்பாக நிழல் அபிகேஷம் செய்யப்படுகிறது. அதன் பிறகு வள்ளி தெய்வானையுடன் சண்முகநாதர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘காதலர் தினத்தன்று கண்டன கடை அடைப்பு’… கவின் – பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ள ‘KISS’ டீசர்.!
February 14, 2025
SL vs AUS : இமாலய இலக்கை எட்ட முடியாத ஆஸி., அணி… அதிரடியாக ஒருநாள் தொடரை தட்டி தூக்கிய இலங்கை.!
February 14, 2025
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பரிசு தொகை அறிவிப்பு.! முதல் பரிசு எத்தனை கோடி தெரியுமா?
February 14, 2025
“வாக்கைச் சிதறடிக்க நினைக்கும் கூட்டணி எத்தனை ‘கெட்டப்’ போட்டு வந்தாலும் களம் நமதே” – மு.க.ஸ்டாலின்.!
February 14, 2025
SLvAUS : நிதானமாக விளையாடிய இலங்கை! ஆஸ்திரேலியாவுக்கு 282 ரன்கள் இலக்கு!
February 14, 2025