பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு – அமைச்சர் செங்கோட்டையன்!

பொது தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு எடுக்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், பொது தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்த முடிவை ஆய்வு செய்து கல்வித்துறை முடிவு எடுக்க உள்ளதாகவும், முதல் அமைச்சரின் ஒப்புதல் பெற்ற பின் அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கவேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும், அதற்காக தான் பெற்றோர்கள் விரும்பி அரசு பள்ளியில் சேர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கப்படாததற்கான காரணம் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக தான் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க கூடிய பெற்றோர்களை ஊக்கப்படுத்துவதற்காக தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அரசு கொண்டு வந்துள்ளதாகவும், இதன்மூலம் நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்பில் தற்பொழுது சேர்ந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025