செப்டம்பர் மாதம் மாநில கல்வி கொள்கை! தரவரிசை பட்டியலில் “102 பேர் 200க்கு 200” – அமைச்சர் பொன்முடி

Published by
பாலா கலியமூர்த்தி

தரவரிசை பட்டியலில் 102 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர் என்று அமைச்சர் தகவல்.

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,847 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பதிவு கடந்த மே 15 முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் 6ம் தேதி வெளியான நிலையில், தற்போது பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியானது. கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியலை http://tneaonline.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி முதல் ஆக.28 வரை நடைபெற உள்ளது. நீட் தேர்வு முடிவு காரணமாக பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஜூலை 2-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தோம்.  மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்காத காரணத்தால், பொறியியல் கலந்தாய்வு நடத்த தாமதமாகும் எனவும் கூறினார். பொறியியல் தரவரிசை பட்டியலில் திருச்செந்தூர் நேத்ரா முதலிடம், தருமபுரி ஹரிணிகா 2-ஆம் இடம், திருச்சி ரோஹிணி 3ம் இடம் பிடித்துள்ளார்.

தரவரிசை பட்டியலில் 102 பேர் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்ற 102 பேரில் 100 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் ஆவர். 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 28, 425 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியலில் வழங்கப்பட்டுள்ளது. இதில், சைதாப்பேட்டையை சேர்ந்த மகாலட்சுமி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் அமைச்சர் கூறுகையில், 7.5% இட ஒதுக்கீட்டில் கடந்தாண்டை விட கூடுதலாக 5,842 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அரசு பள்ளியில் படித்து பொறியியலில் சேர்ந்த 13,284 பேர் புதுமை பெண் திட்டத்தில் பயனடைகின்றனர். அரசு பள்ளியில் படித்த 15,136 ஆண்கள், 13,284 பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பொறியியல் படிப்பு படிக்கவுள்ளனர் எனவும் தெரிவித்தார். மேலும், மாநில கல்வி கொள்கை வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

14 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

15 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

15 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

17 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

17 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

18 hours ago