நாளை முதல் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க உள்ளது.இதற்கான, முன்பதிவை கீழ்க்கண்ட இணையதள பக்கத்தில் பதிவு செய்யலாம்.
நாடு முழுவதும் 2 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளை 3 பிரிவுகளாக பிரித்து கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனை நடைபெற்று வந்தது.அதில்,2 முதல் 8 வரை,8 முதல் 14 வரை,12முதல் 18 வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருத்துவமனைகளில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடத்தப்பட்டது.
இந்த பரிசோதனையில் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் கட்ட சோதனையில் மற்ற தடுப்பூசிகளை ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு நல்ல பலனை அளிக்கக் கூடியதாக இருந்துள்ளது.இதனால்,பயோடெக் நிறுவனம் தனது தடுப்பூசியை மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந்த நிலையில்,பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை 12 லிருந்து 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் வழங்கியது.
இதைத்தொடர்ந்து,கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி,வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15 – 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து,15- 18 வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட https://www.cowin.gov.in/ கோவின் இணையதளத்தில் நேற்று முதல் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேலும்,ஆதார் இல்லாதோர் பத்தாம் வகுப்பு ஐடி கார்டு மூலம் தடுப்பூசி போட முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,நாளை முதல் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கவுள்ளது. அதன்படி,தமிழகத்தில் ஜோன்ஸ் சாலையில் உள்ள மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறார் தடுப்பூசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.எனவே,பெற்றோர்கள் தங்களது 15 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளை தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கிடையில்,15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மேலும்,15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.அதன்படி,
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…