மக்கள் மீது பழி போடுவதை முதலமைச்சர் நிறுத்திவிட்டு , ரூ.5000 நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை பொருத்தவரை சென்னையில் தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.குறிப்பாக கோயம்பேடு சந்தை மூலமாக தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நேற்று மட்டுமே தமிழகத்தில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை9227 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று மட்டுமே 380பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5262 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே முதலமைச்சர் பழனிசாமி கோயம்பேடு மூலமாக கொரோனா பரவுவதற்கு காரணம் என்ன என்று விளக்கம் அளித்தார்.அதாவது,கோயம்பேட்டில் கொரோனா பரவும் என்று முன்பே வியாபாரிகளை எச்சரித்தோம்.அரசின் எச்சரிக்கையை வியாபாரிகள் முதலில் ஏற்கவில்லை.அரசு நடவடிக்கை எடுக்காததால் தான் கொரோனா பரவியது என்று கூறியது தவறு என்று தெரிவித்தார்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், கோயம்பேடு பரவலுக்கு திறனற்ற எடப்பாடி அரசே காரணம். கொரோனா குறித்து சட்டப்பேரவையிலே திமுக எச்சரிக்கை செய்த போது ‘ தமிழ்நாட்டுக்கு வராது ‘, ‘வந்தாலும் ஆபத்தில்லை என்று ஆருடம் சொன்னவர்கள் இப்பொழுது ‘வாழப் பழகிக் கொள்ள வேண்டும் ‘ என்று சொல்லி நோய் பரவலுக்கான பழியை பொதுமக்கள் ,வணிகர்கள் மீது போடுகிறார்கள்.தனது முரண்பாடுகளையும் தவறுகளையும் மறைப்பதற்கு வணிகர்கள்,பொதுமக்கள் மீதி பழிபோடுவதை முதலமைச்சர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.தினக்கூலிகள்,அமைப்பு சாரா தொழிலாளர்கள் ,ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுக்கு வாங்கும் சக்தி இல்லை எனும்போது , தேவையான உணவுப்பொருள்களை எங்ஙனம் வாங்கி நுகர முடியும் ? 1000 ரூபாயோடு அனைத்தும் முடிந்துவிட்டது என்று நினைக்காமல், திசைதிருப்பும் அறிவுப்புகளைத் தவிர்த்து , ரூ.5000 நிவாரண உதவி வழங்கிட முதல்வர் முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…