வெல்லம் மற்றும் பனங்கருப்பட்டியில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை – உணவு பாதுகாப்பு துறை அறிவிப்பு

Published by
லீனா

வெல்லம் மற்றும் பனங்கருப்பட்டியில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும் வெல்லம் மற்றும் பனங்கருப்பட்டியில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு வருகின்றன. பனங்கருப்பட்டி, அச்சு வெல்லம் / குண்டு வெல்லம் ஆகியவற்றிற்கு Food Safety Standards (Food Products Standards and Food Additives) Regulation 2011-ல் தரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெல்லம் / கருப்பட்டி – உணவு மாதிரிகள் அவ்வப்போது எடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் 232 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு அதில் 48 மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டு இவற்றின் மீது சட்ட மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பனங்கருப்பட்டி வெல்லம் தயாரிக்கும்போது வெள்ளை / அஸ்கா சர்க்கரை கெமிக்கல் சேர்த்து தயாரிக்கப்படுவதாகவும். குண்டு வெல்லம் மற்றும் அச்சுவெல்லம் தயாரிக்கும் போது மைதா, வெள்ளை / அஸ்கா சர்க்கரை சூப்பர் பாஸ்பேட், கால்சியம் கார்பனேட், சோடியம் ஹைட்ரோ சல்பேட் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கின்ற கெமிக்கல்களும் மற்றும் செயற்கை நிறமூட்டிகள் ஆகியவை கலப்படம் செய்யப்படுவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது.

பொதுவாக கலப்படமற்ற வெல்லம் அடர் பழுப்பு நிறத்தில் (Dark Brown) இருக்கும். கலப்படம் செய்யப்பட்ட வெல்லம் வெளிர் பழுப்பு அல்லது அடர் மஞ்சள். அல்லது வெளிர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

அதே போல் பொதுவாக கலப்படமற்ற பனங்கருப்பட்டி, வெளிர் பழுப்பு (Light Brown) நிறத்தில் இருக்கும் சர்க்கரை கலப்பட பனங்கருப்பட்டி கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

எனவே, வெல்லம் மற்றும் பனங்கருப்பட்டியில் செய்யப்படும் கலப்படத்தை தடுக்க பொதுமக்களுக்கும். தயாரிப்பாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், கலப்படத்தை தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வெல்லம் மற்றும் பனங்கருப்பட்டி ஆகியவை தயார் செய்யப்படும் இடங்களின் முழு உற்பத்தி செயல்முறைகளை கண்காணிக்கவும். புகார்கள் ஏதும் பெறப்பட்டால் உற்பத்தி செய்யப்பட்ட செயல்முறைகளை மறு ஆய்வு செய்யவும், அனைத்து தயாரிப்பு நிலையங்களிலும் மூலப்பொருட்களின் வருகையில் இருந்து, உற்பத்தி செய்யப்படும் இறுதி நிலை வரை உள்ள அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்கும் வகையில் உத்திரவிடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களை அமைக்க

போதிய விழிப்புணர்வு இல்லாததால் பழுப்பு நிறத்தில் உள்ள வெல்லத்தை விட மஞ்சள், ஆரஞ்சு நிறத்தில் உள்ள கவர்ச்சிகரமான வண்ணங்களில் உள்ள வெல்லம் சிறந்தது என தவறான கருத்து நிலவுகிறது. இத்தகைய மஞ்சள் / ஆரஞ்சு / வெளிற் நிறங்களில் விற்கப்படும் வெல்லத்தை வாங்க வேண்டாமென்றும், இவ்வகையான வெல்லங்கள் விற்பனை செய்தால் அதுகுறித்து புகார் அளிக்கவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…

4 hours ago

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…

4 hours ago

தஞ்சை : நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…

4 hours ago

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு! நடந்தது என்ன?

சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…

5 hours ago

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…

6 hours ago

பிளே ஆப் சென்ற மும்பை….. டெல்லியை வீழ்த்தியதற்கு முக்கிய காரணங்கள் இதுதான்!

மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…

6 hours ago